Skip to content

பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவரது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சி மூலம், பாகிஸ்தான் முழுவதும் பிரபலமாக உள்ளார். 20 ஓவர் பேட்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த அவர், மோசமான பேட்டிங் காரணமாக அந்த இடத்தை இழந்தார். 28 வயதான பாபர் அசாம் மீண்டும் செய்திகளில் டிரெண்டிங்கில் உள்ளார்.அவரது பல அந்தரங்க புகைப் படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் கசிந்தன.ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. டாக்டர் நிமோ யாதவ் என்பவர் இன்று அதிகாலையில் அந்த வீடியோவை டுவீட் செய்து உள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் மற்றொரு மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் காதலியுடன் உறவில் இருந்ததாக  அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

பாபர் ஆசாம் மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் காதலியுடன் உடன் உறவு கொள்வதும். அவருடன் தொடர்ந்து உறவில் இருந்தால் அவரது காதலர் அணியில் இருந்து வெளியேற மாட்டார் என்று உறுதியளிளிக்கப்பட்டதாக அதில் அவர் கூறி உள்ளார். பாபர்ஆசாமின் புகழை கெடுக்கவே  இதுபோன்ற தகவல்கள் லீக் செய்யப்பட்டதாக சில ரசிகர்கள் கூறியுள்ளனர், ஆனால் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளைக் கேட்ட பிறகு, பெரும்பாலான மக்கள் அவரது குணாதிசயத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறாததால் பாபர் ஆசாம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூசிலாந்திடம் அந்த அணி தோல்வியடைந்த பிறகு கேப்டனாக ஆசாமின் நிலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, அவருக்குப் பதிலாக ஷான் மசூத் நியமிக்கப்படலாம் என்ற ஊகங்கள் பரவின. கிரிக்கெட் கேப்டன் ஒருவர் இதுபோன்ற புகாரில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஆஷஸ் கோப்பை 2021-22க்கு முன்னதாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெயினும் இதேபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டார், இதை தொடர்ந்து அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு டெஸ்ட் கூட விளையாடவில்லை. இதற்கு முன் ஹமீசா முக்தார் என்ற பெண் பாபர் ஆசாம் மீது பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், மிரட்டல் போன்றவை குறித்து குற்றம் சாட்டினார். இருப்பினும், முக்தார் பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!