கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம்.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு உலக சிட்டுக் குருவிகள் தினம், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பறவை இனங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்ச் 20 உலக சிட்டுக் குருவிகள் தினம் மற்றும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பறவை இனங்களை காக்கவும், நீர் நிலைகளை அதிகரிக்கவும் ரக்சனா சமூக சேவை அமைப்பின் மூலம், ரக்சனா என்ற பள்ளி மாணவியின் தந்தை ரவீந்தரன், தாய் சங்கீதா, பள்ளி மாணவனான இரண்டாவது மகன் விஷ்வக் நித்தின் குடும்பத்தினர், பறவைகள் தண்ணீர் குடிக்க இலவசமாக தண்ணீர் தொட்டிகளையும், தோட்டங்கள் மற்றும் காடுகளில் 5 அடி மற்றும் 10 அடி அகலம் கொண்ட சிறிய கான்கிரீட் குளங்களை இலவசமாக கட்டி கொடுக்கின்றனர்.
சிறிய தண்ணீர் தொட்டியின் மூலம் தண்ணீர் ஊற்றி பறவைகளுக்கு வீடுகளிலும், தோட்டங்களிலும், காடுகளிலும் தண்ணீர் வைக்கும் பொழுது தினந்தோறும் 10 முதல் 50 பறவைகள் வரை வந்து தண்ணீர் குடிக்க வாய்ப்புள்ளது. 5 அடி, 10 அடி கான்கிரீட் குளங்கள் மூலம் அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளும், கோழிகளும் மற்றும் முயல் அணில்களும் பறவை இணங்கள் மைனா, சிட்டுக்குருவி, கொக்கு, நாரை இது போன்ற அனைத்தும் தண்ணீர் குடிக்க வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றை தடுக்கும்
பொருட்டு, பறவை இனங்கள் அழியாமல் தடுக்க வேண்டும். எனவே, இன்று உலக தண்ணீர் தினத்தன்று பறவைகளை காக்க தண்ணீர் தொட்டிகளையும், 5 அடி, 10 அடி கான்கிரீட் குளங்களைவும் இலவசமாக தருகிறோம் என தெரிவித்தார்.
தேர்வு சமயம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்காத இவர்களது மகளான பள்ளி மாணவி ரக்சனா சிறுவயதில் இருந்தே, நாட்டு விதைகளை இலவசமாக வழங்குவது, யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும், லட்சக்கணக்கான விதைப்பந்துகளை நாடு முழுவதும் சென்று, ஒவ்வொரு மாநிலத்திலும் வீசி விழிப்புணர்வு ஏற்படுத்தி, உலக சாதனை உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை அப்போது மக்களுக்கு வழங்கினர் இதனை ஏராளமான ஆர்வத்துடன் எடுத்து சென்றனர்.