பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கணினி முறை குலுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறது.
தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து (STRONG ROOM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான பாதுகாப்பு அறை சார் ஆட்சியர் அலுவலகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான பாதுகாப்பு அறை வேப்பூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் அனுப்பப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.