மதுரை பாலமேட்டில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மதியம் வரை 300க்கம் மேற்பட்ட காளைகள் அவி€ழ்த்து விடப்பட்டது. இதில் பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜன் என்ற வாலிபர் கலந்து கொண்டு 9 காளைகளை அடக்கினார். மீண்டும் அவர் களத்தில் நின்று காளைகளை அடக்கியபோது ஒரு காளை அவரை கொம்பால் குத்தி தள்ளியது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அரவிந்த்ராஜன் சிகிச்சை பலனின்றி அங்கு இறந்தார். இந்த தகவல் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு கிடைத்ததும் வீரர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போட்டிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.