பாஜ கூட்டணியில் ஓபிஎஸ் தரப்பினர் 13 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து தங்களுக்கு 5 தொகுதிகள் வேண்டும் என. கேட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் 3 தொகுதிகள் என கேட்கப்பட்ட நிலையில் ஒபிஎஸ்சுக்கும், டிடிவிக்கும் சேர்த்து 2 தொகுதிகள் தான் என பாஜ தரப்பினர் உறுதியாகி கூறிவிட்டனர். இந்த விஷயத்தில் டிடிவி ஒத்துக்கொண்டு 1 தொகுதிக்கு ஒகே என கூறிவிட்டு சென்று விட்டார். ஆனால் ஓபிஎஸ் தரப்பினர் எங்களுக்கு ஒன்று என்றால் வேண்டாம் என கூறியுள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்கள் கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் ஓபிஎஸ் தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறினார். இந்த நிலையில் ஓபிஎஸ் நிருபர்களிடம் பாஜ கூட்டணியில் நாங்கள் சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறோம் என்று அறிவித்தார்.. மேலும் ராமநாதபுரத்தில் தானே போட்டியிடுவதாகவும் ஓபிஎஸ் கூறினார்.