தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர், வாக்காளர்கள் அவசியம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு வில்லையினை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த பேரணியில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்இலக்கியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுபிரியா, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மதியழகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.