ஆண்டுதோறும் மார்ச் 21ம் தேதி உலக மனநலிவு தினமாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு மரபணு குறைபாடு. கருமுட்டை உருவாகி செல் பிரியும்போது ஏற்படும் மாறுபாடு. நமது செல்களில் 21 ஜோடி குரோமோசம்கள் இருக்கும். அவற்றில் 24 குரோமோசோம் 2 ஜோடியில் கூடுதலாக ஒன்று சேர்ந்து மூன்றாகிவிடும். அப்போது இதுபோன்ற மன நலிவு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மாறுபட்ட முக அமைப்பு, குறைவான உயரம், இடுங்கிய கண்கள் போன்றவை இருக்கும். புரிந்து கொள்வதில், கற்றுக் கொள்வதில் தாமதம், கண் பார்வை, செவித்திறன் குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள் போன்றவை வரலாம். மேலும் பிறவி இருதய குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த மாறுபாட்டினை குழந்தை பிறந்த உடனே கண்டறிந்து இருதயம், தைராய்டு, கண், காது மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டவுடன் தேவையான ஆரம்ப கட்ட சிகிச்சையை முறையாக அளிக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
இந்த மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் உலக மன நலிவு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உலக நலிவு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தைகள் நலத்துறை தலைவர் செல்வகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் கலந்துகொண்டு பேசுகையில், மனநலிவு பாதிப்பு குழந்தைகளை சிறப்பு கவனம் கொடுத்து மருத்துவர்கள் / பெற்றோர்கள் கவனித்துக் கொள்கின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதில் குழந்தைகள் சிறந்த முறையில் முன்னேற்றம் அடைகின்றனர் என்றார்.
தொடர்ந்து பாரதியார் யசோதை கிருஷ்ணன் டாக்டர் நிலக்கிலார் தமிழன் தேவதை வ உ சிதம்பரனார் வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு கரவொலி எழுப்பி வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, துணைக் கண்காணிப்பாளர் விஜய் சண்முகம், ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் அமுத வடிவு மற்றும் பல கலந்து கொண்டனர்.