தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று 20ம் தேதி தொடங்கியது. இன்று 2ம் நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது. 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
இந்த நிலையில் திமுக, அதிமுக வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. திமுக 21 தொகுதியிலும் அதன் கூட்டணி கட்சியான கொங்கு நாடு தேசிய கட்சி நாமக்கல்லில் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது. தேர்தல் ஆணைய விதிப்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவரும் திமுக வேட்பாளராகவே கருதப்படுவார்.
அதிமுக சார்பில் 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 33 தொகுதிகளில் அதி்முக நேரடியாக களம் காண்கிறது. அதே நேரத்தில் திமுகவும், அதிமுகவும் நாமக்கல்லையும் சேர்த்து 19 இடங்களில் நேருக்கு நேர் மோதுகிறது.
நேருக்கு நேர் போட்டி நடைபெறும் மற்ற 18 தொகுதிகள் விவரம்: வடசென்னை . தென்சென்னை , ஸ்ரீபெரும்புதூர் ,காஞ்சிபுரம் , அரக்கோணம் ,வேலூர் , தர்மபுரி , திருவண்ணாமலை , ஆரணி ,கள்ளக்குறிச்சி , சேலம் ,ஈரோடு , நீலகிரி , கோவை , பொள்ளாச்சி . பெரம்பலூர் , தேனி , தூத்துக்குடி.