அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர், தற்போது இவர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் மீது பல்வேறு ஊழல்புகார்கள் கூறப்பட்டு வந்தது. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகவும் வழக்கு உள்ளது. அத்துடன் குட்கா வழக்கு உள்பட பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுக- பாஜக கூட்டணி இல்லை என உறுதியான நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே வருமானவரித்துறை நடத்திய சோதனை அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகவும், 2021ல் சட்டவிரோத பணபரிமாற்றம் என்ற வகையில் விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் , அதன் தொடர்ச்சியான சோதனை தான் இப்போது நடக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இன்று காலையில் 4 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் மற்றும் மத்திய போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணி முறிந்த நிலையில் அமலாக்கத்துறை இப்போது தான் அதிமுக மீது பாய்ந்துள்ளது. தொடர்ந்து மற்ற மாஜிக்கள் வீடுகளிலும் இந்த நடவடிக்கை இருக்கும் ன்ற பரபரப்பு அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.