பெரம்பலூரில் மதிமுக கட்சியின் சார்பில், மாவட்ட சிறப்பு கூட்டம் இன்று கட்சியின் அவைத்தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைப்பெற்றது.
இதில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள்கே. வரதராஜன் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.