கோவை செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருவபவர் ராமச்சந்திரன்.அதே பகுதியில் இவரது வீடு உள்ளது.வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது இதில் ராமச்சந்திரன் அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேர் விஷம் குடித்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ன போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் செல்வபுரம் காவல்துறையினர் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.