தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பறக்கு படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நான்கு சக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமார் என்பவரிடம் இருந்து 5.88 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்பதும், தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரி சாலை டிபிஎஸ் நகரில் வசூல் செய்து பணத்தை உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தென்னமநாடு பகுதியில் சோதனையில் இருந்த பறக்கும் படை அதிகாரி சந்தனவேல் உள்பட காவலர்கள் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து ஒரத்தநாடு தாசில்தார் சுந்தர செல்வியிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வாசல் பகுதியில் வைக்கோல் வாங்க சென்ற சாமுவேல் இடம் இருந்து ரூ.59,750 ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். பேராவூரணியில் இருந்து வைக்கோல் வாங்குவதற்காக ஓட்டுநர் சாமுவேல் லாரியில் திருத்துறைப்பூண்டி சென்றுள்ளார். அப்போது நெய்வாசல் பகுதியில் சோதனையில் இருந்த பறக்கும்படி அதிகாரிகள் உரிய ஆவணம் என்று எடுத்துவரப்பட்ட ரூ.59,750 ரொக்கத்தை பறிமுதல் செய்து ஒரத்தநாடு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.