பொங்கல் திருநாளுக்கு முன்னதாக 13ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்படலாம் என புரளி கிளப்பப்பட்டது. இப்போது 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இது குறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என பரவிய செய்தி தவறு. பொங்கல் விடுமுறை 17ம் தேதியுடன் முடிகிறது. 18ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.