பாஜக கூட்டணியில் அமமுக வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கமலாலயத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் அண்ணாமலை, டிடிவி தினகரன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து டிடிவி தினகரன் கூறும்போது, நாங்கள் கேட்ட 2 தொகுதிகள் ஒதுக்கி உள்ளனர் . என்னென்ன தொகுதி என்பதை சற்று நேரத்தில் பாஜக அறிவிக்கும். என்ன சின்னத்தில் போட்டியிடுவது என இன்னும் முடிவாகவில்லை. என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார். தஞ்சை, தேனி தொகுதி கேட்டு இருக்கிறோம். தேனி தொகுதியில் நான் ஏற்கனவே எம்.பியாக இருந்தவன். எனவே அங்கு எல்லா பகுதியும் எனக்கு தெரியும். எங்கள் தொண்டர்கள் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடத்தான் விரும்புகிறார்கள்.
எண்ணிக்கை எங்களுக்கு விஷயம் அல்ல, வெற்றி தான் முக்கியம். அதற்காக சிறப்பாக உழைப்போம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். 9 தொகுதிகளில் போட்டியிட எங்கள் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.