பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருந்த நிலையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு எண் கொண்ட கார் ஒன்று பழைய பேருந்து நிலையம் வந்த போது திடீரென அக் காரிலிருந்து ஒரு நபர் தன்னை கடத்தி செல்கிறார்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டு காரின் கதவை திறந்து கத்தினார்.
அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையும் பொதுமக்களும் காரை நோக்கி ஓடி வந்து என்ன என்று பார்த்த போது தன்னை கடத்தி சென்று என்னை ஏதோ செய்து விடுவார்கள் என்பது போல் தெரிகிறது . காரில் ஆயுதங்கள் வைத்துள்ளனர் என்னை ஏதோ செய்ய போகிறார்கள் என்று புலம்பியுள்ளார். காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட நபர் சென்னை புழல் ஏரியாவைச் சேர்ந்த தவமணி என்றும் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலிற்கு சென்று விட்டு தந்தை தாய் உள்ளிட்டோர் திருச்செந்தூர் சென்று விட்டு தவமணி க்கு முன்பாக சென்னை சென்று விட்ட நிலையில் இவரும் இவரது உறவினர்களும் மதுரையைச் சுற்றி பார்த்துவிட்டு பெரம்பலூர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் காவல்துறை யினர் தவமணியுடன் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் மன நலம் பாதித்தது போன்று இவ்வாறு அடிக்கடி உளறுகிறார் என்று கூறினார். சந்தேகத்தை தெளிவுபடுத்தும் வகையில் காவல்துறையினர் தவமணி யின் தந்தைக்கு போன் செய்து பேசினர் அவர் தனது மகன் இப்படிதான் குடிக்கு அடிமையாகி இப்படி உளற ஆரம்பித்துவிட்டான் என்று கூறியுள்ளார். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை சமாதானம் செய்து அவர்களுடன் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பண்டிகை நாட்களில் இது போன்ற பொதுமக்கள் கூட்டத்தில் நடந்த சம்பவத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.