நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுவையில் இன்று
அவர் கலெக்டரிடம் வேட்புமனுவை கொடுத்து விட்டு, டெபாசிட் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் செலுத்துகிறேன் என்றார். அதற்கு கலெக்டர் ரொக்கமாக கொடுங்கள் என்றார்.
ரொக்கம் தன்னிடம் இல்லை. இந்தியா டிஜிட்டல் மயமாகி விட்டது. டிஜிட்டல் யுகத்தில் இந்தியா தான் நம்பர் ஒன் என்று சொல்கிறீர்கள், தள்ளுவண்டிக்கடையில் கூட ஜி பே வசதி உள்ளது. ஏடிஎம் கார்டு , ஜிபே போன்ற டிஜிட்டல் முறையில் டெபாசிட் வாங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு கலெக்டரிடம் மனுவை கொடுத்து விட்டு போய்விட்டார். ஆனால் அவர் டெபாசிட் தொகை செலுத்தவில்லை. வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு முன் டெபாசிட் செலுத்தப்படாவிட்டால் இவரது மனு நிராகரிக்கப்படும்.
இது தவிர கவிதா என்பவரும் திருச்சி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் திருவரங்கத்தில் டிபன் கடை வைத்துள்ளார். இவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.