21 தொகுதிகளுக்கான தி்முக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எம்.பியாக இருந்த 6 பேருக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. அதன்படி தஞ்சை பழனிமாணிக்கம், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, தென்காசி தனுஷ்குமார், தர்மபுரி செந்தில்குமார், சேலம் பார்த்திபன், ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை பழனிமாணிக்கம் ஏற்கனவே 9 முறை தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றுள்ளார். எனவே புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு ஒன்றிய செயலாளருக்கு வழங்கப்பட்டது.
அதுபோல கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி வழக்குகளை சந்தித்து வருவதால் அவருக்கு இந்த முறை சீட் இல்லை, தர்மபுரி செந்தில்குமார், தென்காசி தனுஷ்குமார், ஆகியோருக்கு பதில் புதுமுகங்கள் இறக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் தேமுதிகவில் இருந்து வந்த பார்த்திபனுக்கு பதில் மாவட்ட தி்முக செயலாளர் டிஎம் செல்வகணபதிக்கு இப்போது சீட் கொடுக்கப்பட்டுள்ளது.,இதுபோல பொள்ளாச்சி தொகுதியிலும் சிட்டிங் எம்.பி. சண்முகசுந்தரத்திற்கு பதில் புதுமுகம் ஈஸ்வரசாமி நிறுத்தப்பட்டுள்ளார்.