17-வது ஐ.பி.எல். தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும்மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை திங்கட்கிழமை ஆன்லைனில் தொடங்கியது. சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6.30 மணி முதல் 7.30 வரை நடக்கும் தொடக்க விழாவில்பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனம் இடம்பெறுகிறது. இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப்ரசிகர்களை குதூகலப்படுத்த வருகிறார்கள். இதனால் தொடக்க விழாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.