கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் கோபி கிருஷ்ணனை சந்தித்து பேசினார்கள்.
அப்போது அவர் இது சம்பந்தமான விவசாயிகளின் கோரிக்கையை திருச்சி தலைமை பொறியாளரிடம் கொண்டு செல்வதாகவும் , 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முற்றுகை போராட்டத்தில் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்