நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதைத் தொடர்ந்து வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில்
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது இந்த பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்துபொதுமக்களிடம்
பின்பு பிரசுரம் வழங்கி வாக்களிப்பதின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தர். இந்தப் பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம் என்ற துண்டு பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.