பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி சாலையில் உள்ள மூன்று கடைகளில் நேற்ற இரவு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். ஆனால் எந்த கடையிலும் பெரிய அளவில் திருட்டு போகவில்லை. கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடை, மற்றும் சலூன் கடை, மினரல் வாட்டர் சப்ளை செய்யும் நிறுவனம் ஆகியவற்றின் பூட்டுகளை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
ஆனால் அங்கு பணம், நகை என எதுவும் கிடைக்கவில்லை. மளிகைகடையில் மட்டும் ரூ.750 மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் எடுத்து சென்று உள்ளனர். இன்று காலையில் இந்த சம்பவம் தெரியவந்தது. தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.