நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் குழுவினர் இன்று காலை 7 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் அருகே வாகனம் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பிரகாஷ் (48) என்பவர், தனது டிராவல்ஸ் வேனுக்கு பாடி கட்டுவதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணு கேர் கம்பெனியில்
முன் பணம் கொடுத்து விட்டிருந்த நிலையில் மீதி பாக்கி பணம் ரூ.3,34,950 யை கொடுப்பதற்காக TN 11 X 0664 என்ற டிராவல்ஸ் வேனில் திண்டிவனத்தில் இருந்து கரூர் செல்லும்பொழுது, உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்துச் சென்ற காரணத்தினால் மேற்படி பணத்தினை பறிமுதல் செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.