Skip to content
Home » மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக  ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், பொருளாதார நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.  விரைவில்  பட்டியல் அறிவிக்கப்படும். ஏற்கனவே இந்த தொகுதி திமுக வசம் உள்ளது. 48 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இத்தொகுதியை கைப்பற்றியிருந்தது. அதை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள திமுகவினர்  விரும்பிய நிலையில் அந்த தொகுதி  காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

மயிலாடுதுறை காங்கிரஸ்  வேட்பாளர்  பிரவீன் சக்கரவர்த்தி(51)  சென்னையை சேர்ந்தவர்.எம்பிஏ பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் வார்தன் பள்ளியில் பொருளாதாரம் படித்தவர். ஜப்பான் போன்ற நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியா திரும்பியதும்  முன்னாள்  பிரதமர் மன்மோகன்சிங் ப. சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து பல்வேறு கட்டுரைகளை எழுதியவர். காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர். தொலைக்காட்சி நேர்காணல்களில் காங்கிரஸ் சார்பில் அடிக்கடி பங்கு பெறுபவர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட தரவுப் பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயில்  ஊட்ட உருவாக்கப்பட்ட ஒரு திட்டமான ‘சக்தி’யின் பின்னணியில் அவர் மூளையாக இருக்கிறார். அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். இந்தியாவின் அரசியல் பொருளாதாரம்  நிபுணர்  என கருதப்படுகிறவர். தற்போது டெல்லியில் இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இவர் பெயர் மயிலாடுதுறை தொகுதிக்கு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *