தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் நேற்று ஒரு பட்டியலில் பரவியது. அதில், தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், கரூர் தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணி, தூத்துக்குடி தொகுதியில் நடிகை ராதிகா, கோவை தொகுதியில் ஏ.பி.முருகானந்தம், திருநெல்வேலி தொகுதியில் நயினார் பாலாஜி, திருச்சி தொகுதியில் ஆசீர்வாதம் ஆச்சார்யா, ராமநாதபுரம் கருப்பு முருகானந்தம் உள்பட 11 தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பட்டியல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கிடையில், தமிழக பா.ஜனதா வேட்பாளர்கள் என்று பரவும் இந்த பட்டியல் போலியானது என்று தமிழக பா.ஜனதா தங்களது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.