உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஐகோர்ட் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் பதவியும் இழந்தார். இந்த தீர்ப்பு குறித்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதனால் பொன்முடியின் எம்.எல்.ஏ பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பொன்முடிக்கு அமைச்சர் பதவி பி்ரமாணம் செய்து வைக்கும்படி முதல்வர் ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் டில்லி சென்று ஆலோசிக்க போகிறேன் என டில்லிக்கு ெ சன்ற கவர்னர் ரவி 3 நாள் கழித்து சென்னை வந்தார். அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தி்ல் பொன்முடிக்கு பதவி பி்ரமாணம் செய்து வைக்க முடியாது. அவரது வழக்கு நிலுவையில் உள்ளது என கூறி இருந்தார்.
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்த கவர்னர் ரவியின் முடிவை எதிர்த்து திமுக சார்பி்ல் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது.