புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை, 2 பதவிகளையும் ராஜினாமா செய்கிறார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் இன்று பதவிகளை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று தமிழிசை புதுச்சேரியில் உள்ளார்.
தமிழிசை, புதுச்சேரி, குமரி, தென் சென்னை ஆகிய 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. புதுவையில் பாஜகவினரே தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகி்றார்கள். அதே நேரத்தில் புதுச்சேரி தான் தேர்தல் பணிக்கு எளிதான இடம் என தமிழிசை கருதுகிறார். ஆனால் அவர் எங்கு போட்டியிடுகிறார் என 2 தினங்களில் அறிவிக்கப்பட்டு விடும்.