மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், இந்த 3 மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை தமிழகம் வந்து உள்ளார். இன்று 6வது முறையாக கோவை வருகிறார். கோவையில் அவர் வீதி வீதியாக சென்று ரேைாடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், கோர்ட் மூலமாக அனுமதி பெற்று இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்துகிறார்.
கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் மற்ற இடங்களை விட கோவையில் கணிசமான வாக்கு பெற்று விட வேண்டும். கோவையில் தங்களுக்கு பெரும் ஆதரவு இருப்பதாக
இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோயில் அருகே வருகிறார். மாலை 5.45 மணிக்கு வாகனப் பேரணி தொடங்கி, பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, டி.வி.சாமி சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நிறைவடைகிறது. இடையில் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி மக்களை சந்திக்கும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.வாகனப் பேரணி முடிவில் கோவை தொடர்குண்டு வெடிப்பில் பலியானவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கெஜல்நாயக்கன்பட்டிக்கு நாளை மதியம் ஒரு மணியளவில் பிரதமர் வருகிறார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், ஹெலிகாப்டர் மூலமாக சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.