காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை மாற்றம் செய்ய திமுக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை விரைவாக முடிவு செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்றில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் இறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறையும், கரூருக்கு பதிலாக ஈரோடும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. 3வதாக மாற்றம் செய்யப்படும் தொகுதியான தேனிக்கு பதிலாக காங்கிரசுக்கு திருநெல்வேலியை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்தும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் இன்று இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பை செல்வதால் திமுக-காங்கிரஸ் ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.
திமுக-காங் கூட்டணியில் அந்த ஒரு தொகுதியால் தான் சிக்கல்..
- by Authour