2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் டில்லியில் அறிவித்து வருகிறார். ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தேர்வு போன்று தான். மக்களவை தேர்தலில் தகுதியான அனைவரும் வாக்களிக்க வேண்டும். அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மக்களவை தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து அதிகாரிளுடனும் ஆலோசனை செய்தோம். மக்களவை தேர்தலுக்கு 10.5 கோடி வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தலுக்கான பொருட்களை வாக்குசாவடிகளக்கு அனுப்பவது என்பது மிகப்பெரிய சவால். 16 குடியரசு தலைவர், துணை தலைவர் தேர்தல்களை நடத்தி உள்ளோம். 2 ஆண்டுகளில் 11 மாநில தேர்தல்களை நடத்தியுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் 96.80 கோடிபேர் வாக்களிக்க உள்ளனர். அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநில தேர்தல்களில் 3400 கோடி பணம் சிக்கியது. ஆகையால் மாலை 6 மணிக்கு மேல் ஏடிஎம்மில் பணத்தை நிரப்பக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.