Skip to content
Home » 3 மாநிலங்களில் கடும் குளிர் அலை வீசும்… வானிலை மையம் எச்சரிக்கை..

3 மாநிலங்களில் கடும் குளிர் அலை வீசும்… வானிலை மையம் எச்சரிக்கை..

டில்லியில் கடந்த  5 முதல் ஜனவரி 9ம் தேதி வரை கடுமையான குளிர் அலையை இருந்தது. இது 2019 ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமானதாக கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களில் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஜனவரி 17-18 வரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளது என்றும், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர் அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *