பிரதமர் மோடி இன்று காலை கன்னியாகுமரி அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் , மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் இடம்பெற்றுள்ள பேனரில் பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு, மாபெரும் பொதுக்கூட்டம், கன்யாகுமரி என்று எழுதப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி என்பதற்கு பதில் கன்யாகுமரி என்ற தவறுதலாக எழுதப்பட்டுள்ளது. கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்திலேயே தவறு இருப்பதை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் முகம் சுழித்தனர்.