Skip to content
Home » மருது சேனை அமைப்பின் தலைவரைக் கொல்ல முயற்சி… மதுரையில் சம்பவம்..

மருது சேனை அமைப்பின் தலைவரைக் கொல்ல முயற்சி… மதுரையில் சம்பவம்..

மதுரையை அடுத்த திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்படுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிட்டவர். இவரது அமைப்பின் அலுவலகம் கள்ளிக்குடி – கல்லுப்பட்டி சாலையில் உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் தனது அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி – விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது மைட்டான்பட்டிக்குள் நுழையும் பகுதியில் இவரது கார் சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதியுள்ளது.

தொடர்ந்து காரில் வந்த கும்பல், ஆதிநாராயணன் காரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசி உள்ளது. குண்டு காரின் முன் பகுதியில் குண்டு விழுந்து வெடித்தது. இருப்பினும், ஆதிநாராயணன் மற்றும் அவரது ஓட்டுநரும் சுதாரித்துக் கொண்டதால் அந்தக் கும்பல் அங்கிருந்து காரில் விருதுநகரை நோக்கி தப்பியது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மருது சேனை அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். பெட்ரோல் குண்டுவீச முயன்றவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கள்ளிக்குடி- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் குறுக்கே காரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது.. கடந்த 2 நாளுக்கு முன்பு விருதுநகர், கள்ளிக்குடி பகுதியில் போலீசாரின் துணையோடு கஞ்சா புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும், இதில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே தனது அமைப்பின் பொருளாளரை கொலை செய்த ஞானசேகரின் ஆதரவாளர்கள் மூலம் தன்னை கொலை செய்யும் நோக்கில் தனது கார் மீது மோதி, பெட்ரோல் குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்ல முயற்சித்துள்ளனர். தனது கார் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினேன் என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!