கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல் பட்டி கிராமத்தில் தமிழ்நாடு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் தென்னையில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் மேலாண்மை தடுக்கும் விதமாக விவசாயிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு இயற்கை பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி தலமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் தேசிய வேளாண் பூச்சிகள் மூலாதார அமைப்பு விஞ்ஞானி
செல்வராஜ் விவசாயிகளுக்கு வெள்ளை தாக்குதல் குறித்து எடுத்துரைத்தார். இதில் நன்மை செய்யும் பூச்சிகள் 90% தீமை செய்யும் பூச்சிகள் 10 சதவீதம் உள்ளது இயற்கை முறையில் உள்ள மருந்துகள் வாங்கி வெள்ளை ஈக்களை அழிக்க முடியும் எனவும் கடந்த 2017ம் ஆண்டு அதிகமாக தென்னை மரங்களை தாக்கிய ஈக்கள், நான்கு வகை கொண்ட வெள்ளை ஈக்கள் உள்ளது.
கடந்த காலங்களில் நாட்டு மரங்கள் அதிக மகசூல் தந்தது தற்போது இளநீர் விற்பனைக்காக நெட்டை, குட்டை தென்னை மரங்கள் அதிகமாக விவசாயிகள் வளர்ப்பதால் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது,மற்ற தென்னை மரங்களுக்கு பரவாமல் இருக்க இயற்கை மருந்துகள் கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது மேலும் தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய சலுகைகள் தரப்படுகிறது என தெரிவித்தார் மேலும் ஆள் இல்லா விமான மூலம் தென்னை மரங்களுக்கு மருந்துகள் தெளிக்கும் முறை செய்து காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.