தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள், அரசு அதிகாரிகள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று தனது அலுவலகத்தில் சக போலீசாருடன் பொங்கல் கொண்டாடினார். இன்று காலை தனது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
