Skip to content
Home » தோல்வி பயத்தால் தான் மோடி சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தியுள்ளார்…திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி…

தோல்வி பயத்தால் தான் மோடி சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தியுள்ளார்…திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா
தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்றத் தேர்தல் குறித்ததான

ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா…

பாஜகவின் மதவாத செயல் திட்டங்களை நிறைவேற்றிட தேர்தலை கருவியாக சூழ்ச்சியோடு செயல்பட்டு வருகிறது. இந்த அபாயாத்திலிருந்து நாட்டை மீட்பதற்காக இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்டு தமிழ்நாடு, புதுவையில் திமுக தலைமையிலான அணியை ஆதரிப்பது, வருகிற 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்படும் மாநிலங்கள் தேர்தலில் ஒரு தொகுதி கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு தொடுப்பது என நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

மேலும், இன்று நடைபெற்ற செயற்குழுவில் எந்தவித குற்றச்சாட்டும் நிர்வாகிகள் தெரியவில்லை.
நாங்கள் எந்தவித முடியும் தனிச்சியாக எடுக்கப்படவில்லை.

இந்தியா கூட்டணி தற்போது பலமாக உள்ளது ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் கேட்டிருந்தால் தயக்கமாக இருந்திருக்கும் தற்பொழுது இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தோல்வி பயம் பாஜகவுக்கும், மோடிக்கும் வந்துள்ளது. எனவே, அவசர அவசரமாக விதிமுறைகளை வகுத்து சிஐஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *