திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு பட்டாக்கள் வழங்கியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், அப்துல் சமது, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துறை அதிகாரிகள் சுயஉதவி குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில்… தேர்தல்காக நீங்கள் வேக வேகமாக புதிய பணிகளுக்கு துவக்கி வைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு…
நீங்கள் கூட வேகமாக கேள்வி கேட்கிறீர்கள் என்று நகைச்சுவை பதிலளித்த அமைச்சர் தொடர்ந்து
இன்று பல்வேறு திட்டப் பணிகள் வேகமாக துவங்குவது என்பது மீதம் இருக்கும் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக துவங்கப்படவில்லை. பஞ்சபூர் பேருந்து முனையம் பணிகள் முழுமையாக
முடிந்தால் தான் திறக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக போய கொண்டிருக்கிறது.
கமலஹாசனுக்கு மக்களவைத் தொகுதி கொடுத்திருப்பது. முதல்வர் எது செய்தாலும் சரியாக தான் செய்வார். யாரும் விமர்சனம் செய்யவில்லை. தொகுதி பங்கீடு அறிவித்தவுடன்தான் வேட்பாளர் அறிவிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் யார் எங்கு போட்டியிடுவார்கள் என அறிவிக்க முடியும். வீடு கட்டும் திட்டத்திற்கு
இரண்டு லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு வீடு கட்டம் திட்டத்தில் மத்திய அரசு கொடுப்பது 80ஆயிரம் தான், மீதம் மாநில அரசு கொடுக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் 30 சதவீதம் தான் மத்திய அரசாங்கம் கொடுக்கிறது. மீதம் மாநில அரசு தான் கொடுக்கிறது என தெரிவித்தார்.