Skip to content
Home » பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்ற இனங்களுக்கு மாநில அளவில் 1.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி எளிதாக ஏறுவதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கும் பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு

சிறந்த பனை ஏறும் இயந்திரம்/ கருவி கண்டுபிடிப்பவர் ஒருவருக்கு விருது வழங்க ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம்) நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பாளர்கள் தோட்டக்கலைத்துறையால் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

எனவே, பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் தன்னார்வர்கள், பல்கலைக் கழங்கங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் www.tnhorticulture.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக விருது பெறுவதற்கு 15.03.2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!