மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது. இதில் திமுக தலைவர் , முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.