கரூர் அருகே உள்ள வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் மனைகள் அனைத்தும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது எனவும், குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர்
இந்து சமய அறநிலையத்துறை முதற்கட்டமாக பலரது குடியிருப்புகளை காலி செய்ய வலியுறுத்தி நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியது.
அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்நிலையில் வெண்ணைமலையை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வெண்ணைமலை பகுதியை சேர்ந்த வணிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.