ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகர்த்தி் வேறு இடத்தில் வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ராமானுஜ திருமால் அடியார்கள் குழாம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கா ரங்கா கோபுரம் முன்பு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அடித்து ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே கொடிமரம் முன்பு இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.