பிரதமர் நரேந்திர மோடி நாளை ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது…பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் மற்றும் புதிய குட்ஸ்செட் யார்டுகள் போன்ற ரூ. 85 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை காணோளி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார். இதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள 44 ரெயில் நிலையங்களில் 60 ஒரு நிலையம் ஒரு தயாரிப்புக் கடைகள் , பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ரூ. 7 கோடி மதிப்பில் 2 குட்ஸ்செட் யார்டுகள் மற்றும் திருச்சி ரெயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள மருந்தகமும் அடங்கும்.
2 மெமு ரெயில்
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் (அரிசி மற்றும் நெல்) ஏற்றுதல் தொடங்கப்பட்டது. இதுவரை 28.5 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன மற்றும் திருத்துறைப்பூண்டி குட்ஸ்செட் யார்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கி இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரெயில் திருச்சியில் இருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம், மேலும் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. மைசூர் – சென்னை விரைவு ரெயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்றும் கூடுதலாக 2 மெமு ரெயில்கள் கேட்டுள்ளோம் என்றார்.