தென்னிந்திய நடிகர் சங்கத்திக்கு புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடம் நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக முழுமைபெறாமல் இருக்கிறது. இந்த பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். சமீபத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார்.