மலையாளப்பட்டியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து (தீனதயாளன்) அன்னமங்கலம் – எசனை கைக்காடியில் சாலையை கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் மீது அதிவேகமாக மோதி அருகில் இருந்த கரும்புஜூஸ் கடை மீதும் மோதி கோரவிபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் எசனை கைக்காட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் உடல் மற்றும் இருசக்கர வாகனமும் பேருந்து அடியில் மாட்டிக்கொண்டது. தொடர்ந்து பேருந்து அருகில் இருந்த ஜூஸ்கடை மீது மோதி கடையின் உரிமையாளர் குமார் (45) மீது மோதியதில் வலது கால் நொருங்கியது.
தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் போலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததையடுத்து குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமைமருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்புபடையினரைக் கொண்டு பேருந்து அடியில் சிக்கிக்கொண்ட செல்வராஜ் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பெரம்பலூர் – ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் போக்குவரத்து அரைமணிநேரத்திற்கும் மேலாக பாதித்தது. மேலும் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் செல்வகுமாரை பெரம்பலூர் நகர போலிஸாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இதே பெரம்பலூர் – ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை எசனை கைக்காட்டியில் தொடர்விபத்துகள் நடைபெற்று வருவதால் கைக்காட்டியில் விபத்துகளை தடுக்க வேகத்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து தனியார் பேருந்துகளை ஆய்வு செய்யவும் கோரிக்கை வைத்தனர்.