தஞ்சை , பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் நடந்தது. திருவாரூர் மாவட்டக் கவுன்சிலர் சாந்தி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஜெயப்ரிதா பேசினர். விவேகானந்தா கல்வி சங்க செயலர் கண்ணதாசன் பணியாளர்களுக்கு தங்க நாணயம், ஊக்கத்தொகையை வழங்கினார். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதேப் போன்று சாலிய மங்கலம் விசா அறக் கட்டளைச் சார்பில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் பெண்களுக்கு பேச்சு, கோலம், மாறுவேடம் உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப் பெற்று பரிசு வழங்கப் பட்டது. இதில் அறக் கட்டளை நிர்வாகி சுசிலா, ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் வான்மதி உள்பட பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது. முன்னதாக பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா வரவேற்றார். மாவட்ட மகளிர் அணி சத்யபிரியா தலைமை வகித்தார். முத்துலெட்சுமி, லதா, ஹபீபாகனி, செந்தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.
மகளிர் அணியினர் கேக் வெட்டியதுடன், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதில் அய்யம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் புனிதவதி, பாபநாசம் சட்ட மன்ற தொகுதி ஐடி விங்க்
ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாண்டியம்மாள், பல்கீஸ் பீவி, தஸ்லீமா பானு, பேரூர் துணை செயலர் கற்பகவள்ளி உட்பட மகளிர் அணியினர் தி.மு. கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். பேரூர் திமுக மகளிரணி துணை அமைப்பாளர் லதா நன்றி கூறினார்.