மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாகை ADM மகளிர் கல்லூரி மற்றும் ADJD தொழில் நுட்ப கல்லூரிகள் சார்பில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. கல்லூரி முதல்வர்கள் முனைவர்கள் அன்புச்செல்வி, செந்தில் குமார் ஆகியோர் பேரணியை
கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியானது கல்லூரி வளகாகத்தில் தொடங்கி தம்பிதுரை பூங்கா, ப்பளிக் ஆபிஸ் ரோடு, வெளிப்பாளையம் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பெண்கள் முன்னேற்றம் குறித்த முழக்கங்களை எழுப்பினர். இதில் கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவிகள் 1000 த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.