கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் நண்பர்களோடு ரூம் எடு தங்கி உள்ளார். அவர் வேலை பார்த்த அதே நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் சேதுபுண்ணவாய்க்கால் நாடார் தெருவை சேர்ந்த ஆரோக்கிய ஜெர்சலின்(18) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் 2 பேருக்கும் பழக்காமாகியுள்ளது. நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. அலெக்ஸ் தங்கியிருக்கும் ரூம் அருகே ரயில்வே தண்டவாள பகுதியில் அலெக்ஸ், ஆரோக்கிய ஜெர்சலினுடன் பேசி கொண்டிரு ந்ததாக தெரிகிறது. அப்போது செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி இரவு நேர கடைசி ரயில் வந்துள்ளது. அந்த ரயில் மோதாமல் இருக்க ஓரமாக ஒதுங்கியுள்ளது. அப்போது ரயில் மோதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாணையில்…. செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் வந்ததால் தண்டாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அப்பகுதி பள்ளமாக இருந்ததால் தண்டவாளத்தையொட்டி ஓரமாக நின்றபோது மின்சார ரயில் மோதி பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.