திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தேர்தல் பணிக்குழ அறிவித்த நிலையில் அவர்கள் அந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் மதிமுக நிர்வாக்குழு கூட்டம் நடந்தது. வைகோ தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பது என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
. இந்திய நாட்டை சூழ்ந்துள்ள பாசிச இருளைப் போக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது வரலாற்று கடமை மற்றும் அரசியல் சாசனத்தை பாதுகாக்க பாஜக தலைமையிலான அரசை அகற்றியே தீர வேண்டும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கிடையே மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கவும் திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. வைகோ தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அந்த பதவி2025ல் முடிகிறது. அப்போது அந்த ஒரு இடம் மதி்முகவுக்கு வழங்கப்படும் என்றும் திமுக தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அநேகமாக திமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படலாம். அதில் வைகோ மகன் துரை வைகோ நிற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.