தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத் தான் வேண்டும்; எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது” என்று பேசி இருந்தார்.
இந்த விவகாரத்தில் உதயநிதிக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. என்ற போதும் அதில் எந்த வழக்கிலும் அவர் தண்டிக்கப்படவில்லை எனவே, எதன் அடிப்படையில் நீங்கள் அமைச்சர் பதவியில் நீடிக்கிறீர்கள் என அவரைக் கேட்க முடியாது எனவும் நீதிபதி அனிதா சுமந்த் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.