Skip to content
Home » குழந்தை கடத்தல்… போலி வீடியோ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை… எஸ்பி..

குழந்தை கடத்தல்… போலி வீடியோ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை… எஸ்பி..

  • by Authour

நாகை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், ஒரு பெண்ணை மயக்கமருந்து அடித்து கடத்தியதாகவும் வாட்சாப்பில் வதந்திகள் பரவி வந்தது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக வட இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் வதந்தி பரவியது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த வதந்தியால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமடைந்து வந்தனர். மேலும் வாட்சப் குரூப்களிலும் பல போலி வீடியோகள் வாய்ஸ் மெசேஜ்கள் பரவி ஒரு சிலர் அதனை ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து இருந்தனர். நாகை மாவட்டம் முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குழந்தை கடத்தல் வதந்திக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த எஸ் பி வாட்ஸாப்களில் பரவிய வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை செய்தியாளர்களுக்கு காண்பித்து அவைகள் தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில்

எங்கெங்கும் நடைபெறாத சம்பவங்கள் என்றும் பல்வேறு எடிட்டிங் செய்யப்பட்டு பரப்பப்படும் வதந்தி என விளக்கிக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாகை எஸ்பி ஹர்ஷிங் கூறுகையில் ; நாகை மாவட்டத்தில் இதுவரை குழந்தை கடத்தல் தொடர்பாக ஒரு புகார்மனு கூட இதுவரை வரவில்லை காரணம் அதுபோல ஒரு சம்பவம் கூட அப்படி நடக்கவில்லை என்று கூறினார். காவல்துறை 24 மணி நேரமும் பணியில் இருப்பதாகவும், 8428103092 என்ற அலைபேசி எண்ணுக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். குழந்தைகள் கடத்தப்படுவதாக போலியாக வாட்சாப் மூலம் வதந்தி பரப்பிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல போலி செய்திகளை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எனவே பொதுமக்கள் இதுபோன்ற வீடியோக்களை பகிர வேண்டாம், தங்களுக்கு யாரேனும் இதுபோன்ற போலி வீடியோக்களை அனுப்பினால் அவர்களின் விவரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறினார். மேலும், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அச்சமில்லாமல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனுப்பலாம் எனவும், ஆசிரியர்கள் பயமில்லாமல் பள்ளிகளை நடத்தலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *