திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. சோம்பரசன் பேட்டை, அல்லித்துறை, சரவணபுரம் சாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புங்கனூர் செல்ல வேண்டிய பள்ளிக்கு பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள், மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சில ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ
பழனியாண்டி இடம் புதிய பஸ் சேவை செய்து தரக்கோரி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் உடனடியாக கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து அவரே பேருந்தை இயக்கி தொடங்கி வைத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.